இந்தியா

கேரளத்தில் கனமழை எதிரொலி: இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

PTI


இடுக்கி: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, இடுக்கி மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் வரும் 24 மணி நேரத்தில் 115.6 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை பதிவாகும் என்றும் எச்சரித்துள்ளது.

ஒரு வார காலத்துக்கும் மேலாக இடுக்கி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென் தமிழக கடற்கரையோரத்தில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் காரணமாக, இடுக்கியில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் கனமழையுடன், இடி மற்றும் காற்று வேகமாக வீசுவது பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT