300 யூனிட் இலவச மின்சாரம்: அறிவிக்க இருக்கிறார் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வராக பதவியேற்றிருக்கும் பகவந்த் மான், 300 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் முதல்வராக பதவியேற்றிருக்கும் பகவந்த் மான், 300 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவு பெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மிக்கு வெற்றி தேடிக் கொடுத்த மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த அறிவிப்பை பகவந்த் மான் நாளை அறிவிக்கயிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வியாழக்கிழமை ஜலந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், வரும் 16ஆம் தேதி மாநில மக்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கவிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
Advertisement
கடந்த செவ்வாயன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்த பகவந்த் மான், இலவசமாக 300 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.