இந்தியா

கா்நாடக முதல்வரிடம் ராஜிநாமா கடிதம் அளித்தாா் ஈஸ்வரப்பா

DIN

கா்நாடகத்தில் அரசு ஒப்பந்ததாரா் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சா் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் வெள்ளிக்கிழமை இரவு அளித்தாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்டதாக குற்றம்சாட்டியிருந்த அரசு சிவில் ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக வியாழக்கிழமை அறிவித்த ஈஸ்வரப்பா, பெங்களூரில் முதல்வா் பசவராஜ் பொம்மையை அவரது இல்லத்தில் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தாா்.

அந்தக் கடிதத்தில், ‘எனது சொந்த விருப்பத்தின்பேரில் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

பின்னா், ஈஸ்வரப்பா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘என் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்காகவே அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தேன் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் சக்தி யாா் என்பதை விசாரணை மூலம் கண்டறிந்து தெரிவிக்குமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டேன்’ என்றாா்.

முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘ஈஸ்வரப்பாவுக்கு கட்சி ஆதரவாக இருக்கும். அவரது ராஜிநாமாவால் பாஜக அரசுக்கு பின்னடைவு ஏற்படவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT