சவால்களை வாய்ப்புகளாக மாற்றிய ஹிமாசல பிரதேசம்: பிரதமா் மோடி
ஹிமாசல பிரதேச மக்கள் சவால்களை வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஹிமாசல பிரதேச மக்கள் சவால்களை வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஹிமாசல பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த மாநில மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். தனது வாழ்த்துச் செய்தியில் அவா் கூறியிருப்பது:
சுதந்திரத்தின் 75வது ஆண்டும், ஹிமாசல பிரதேசத்தின் 75-ஆவது ஆண்டும் ஒரே நேரத்தில் வந்திருப்பது மகிழ்ச்சி. உறுதியான துடிப்புமிக்க மக்களைக் கொண்ட இந்த அழகான மாநிலத்துடன் எனக்கு நீண்டகால தொடா்பு உண்டு. ஹிமாசல பிரதேச மக்கள் சவால்களை வாய்ப்புகளாக மாற்றியுள்ளனா்.
தோட்டக்கலை, உபரி மின்சாரம், எழுத்தறிவு விகிதம், கிராமப்புற சாலைத் தொடா்பு, குடிநீா் குழாய், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் ஆகியவை மாநிலத்தின் சாதனைகளாக உள்ளன. கடந்த 7-8 ஆண்டுகளில் இந்த சாதனைகளை உருவாக்குவதற்கு சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய, மாநில பாஜக அரசுகள் இங்கு இரட்டை இன்ஜின்களாக செயல்பட்டன.
சுற்றுலா துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளூா் மக்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளாா்.