புது தில்லி: அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமான் சிலையை 2022 ஏப்ரல் 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
'அனுமன்ஜி4தாம்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் நான்கு திசைகளில் அமைக்கப்படவிருக்கும் 4 சிலைகளில் இது இரண்டாவது சிலையாகும். இது மேற்கு பக்கத்தில் மோர்பியில் உள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதலாவது அனுமன் சிலை வடக்குப் பகுதியில் 2010ல் சிம்லாவில் அமைக்கப்பட்டது. தெற்கே ராமேஸ்வரத்தில் சிலை நிறுவும் பணி தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.