இந்திய ராணுவத்தின் 29வது புதிய தளபதியாக மனோஜ் பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது. 28வது ராணுவத் தளபதியாக இருந்த எம்.எம்.நரவாணேவின் பதவிக்காலம் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் நிறைவடகிறது. இவர் 28 மாதங்கள் ராணுவத் தளபதியாக சேவையாற்றினார்.
ராணுவத்தில் பொறியாளர் பிரிவைச் சேர்ந்தவர் மனோஜ் பாண்டே. ராணுவத்தில் பொறியாளர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோஜ் பாண்டே இந்திய ராணுவத்தில் 39 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். இவர் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபர் பிரிவு தளபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.