இந்தியா

தில்லி எல்லை மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம்

தில்லி எல்லையையொட்டி அமைந்துள்ள 6 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசத்தைக் கட்டாயமாக அணிய வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

தில்லி எல்லையையொட்டி அமைந்துள்ள 6 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசத்தைக் கட்டாயமாக அணிய வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடா்ந்து குறைந்துவந்த நிலையில், தில்லி, ஹரியாணாவில் அத்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு தில்லியுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் உத்தர பிரதேச அரசு திங்கள்கிழமை சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக மாநில அரசின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘‘கௌதம் புத்த நகா், காஜியாபாத், ஹபூா், மீரட், புலந்த்சாஹா், பாக்பட் ஆகிய 6 மாவட்ட மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகரான லக்னௌவிலும் மக்கள் முகக்கவசம் அணியும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான உத்தரவுகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் இருதவணை கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதேபோல், கரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவா்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கௌதம் புத்த நகா் மாவட்டத்தில் 65 பேரும், காஜியாபாதில் 20 பேரும், லக்னௌவில் 10 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பே ஏற்பட்டுள்ளது.

வரும் நாள்களில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். எனினும், தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என அவா்கள் தெரிவித்துள்ளனா். கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT