இந்தியா

அருணாசலில் கனமழை: 3 பேர் பலி

DIN

அருணாசலப் பிரதேசத்தின் குருங் குமே மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாநிலம் முழுவதும் நிலைகுலைந்தது. பல பகுதிகளில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகள் சேதம் அடைந்தன. 

திங்களன்று கொலோரியாங் வட்டத்தில் உள்ள சுலுங் தபின் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 15 வீடுகள் வரை சேதமடைந்தது. மூன்று பேர் மண் சரிவில் சிக்கி உயிருடன் புதையுண்டன என்று கூடுதல் மாவட்ட ஆணையர் ஓஷன் காவ் கூறினார்.

இறந்தவர்கள் சரியு டோங்டாங்(52), சரியு யாஜிக்(47) மற்றும் சரியு தகர்(9) என அடையாளம் காணப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். 

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக காவ் கூறினார். 

கடந்த திங்களன்று இரவு 7 நிலச்சரிவுகளும், செவ்வாயன்று அதிகாலை மற்றுமொரு நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைத் தூய்மைப்படுத்து பணி நடைபெற்று வருகின்றது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT