இந்தியா

உ.பி.யில் தலித் மாணவர் துன்புறுத்தல்: விடியோவால் சிக்கிய 7 பேர்

DIN

உத்தரப் பிரதேசம், ரேபரேலியில் 10-ம் வகுப்பு தலித் மாணவர் தாக்கப்பட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

ரேபரேலியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை, மூத்த மாணவர்களின் கால்களை நக்கவைத்து அதை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வைரல் செய்தனர். 

திங்களன்று விடியோ சமூக ஊடகங்களில் வைரலானவுடன், மாவட்ட காவல்துறைத் தலைவர், பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ஐந்து குழுக்களை அமைத்தார்.

இதுகுறித்து ரேபரேலி காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் கூறுகையில், 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மைனர் என்பதால் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் 6 பேர் அபிஷேக், விகாஸ் பாசி, மகேந்திர குமார், ஹிருத்திக் சிங், அமன் சிங் மற்றும் யாஷ் பிரதாப் என அடையாளம் காணப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

10-ம் வகுப்பு தலித் மாணவன், அதே பள்ளியில் உள்ள மூத்த மாணவர்களின் மிரட்டலுக்கு அடிபணியாத நிலையில், மனிதாபிமானமில்லாது சித்ரவதை செய்யப்பட்டுள்ளான் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT