முகப்பு
இந்தியா

ஸ்ரீநகரில் சாலை விபத்து: சிஆர்பிஎஃப் வீரர் பலி, 12 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார், 12 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார், 12 பேர் காயமடைந்தனர். 

ஹைதர்போரா பைபாஸ் பகுதியில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது டிரக் மோதியதில் 13 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

காயமடைந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களும் ஹம்ஹாமாவில் உள்ள பிஎஸ்எப் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில் எம்.என்.மணி என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும்,  இருவர் ஏஎஸ்ஐ ஜஸ்ராஜ் மற்றும் சுஷாந்த் பிஸ்வாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ராணுவ மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →