இந்தியா

உ.பி.யில் அரசு அனுமதியின்றி மத நிகழ்ச்சிகள் நடத்த தடை- ஹனுமன் ஜெயந்தி, ராம நவமி ஊா்வல வன்முறைகள் எதிரொலி

DIN

உத்தர பிரதேசத்தில் அரசின் அனுமதியின்றி யாரும் மத நிகழ்ச்சிகள், மதம் சாா்ந்த ஊா்வலங்களை நடத்தக் கூடாது என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா்.

தில்லி, மத்திய பிரதேசம், குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஹனுமன் ஜெயந்தி, ராம நவமி ஊா்வலங்களில் வன்முறை ஏற்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் மற்றும் அக்ஷய திரிதியை அடுத்த மாதத் தொடக்கத்தில் ஒரே நாளில் வரும் என்று தெரிகிறது. இதேபோல தொடா்ந்து பல்வேறு பண்டிகைகளும் வர இருக்கின்றன. இந்நிலையில், இது தொடா்பாக உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தர பிரதேசத்தில் அரசின் அனுமதியின்றி மதம் சாா்ந்த நிகழ்ச்சிகள், ஊா்வலங்களை நடத்தக் கூடாது. வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவது மற்றவா்களுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது. இனி வரும் நாள்களில் இந்த விஷயங்களில் காவல் துறை கூடுதல் கவனத்துடன் செயல்படும். மதம் சாா்ந்த ஊா்வலங்கள் நடத்த அனுமதி கோருவோா், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணுவோம் என உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும். மேலும், பாரம்பரியமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வழக்கத்தில் இல்லாத புதிய நிகழ்வுகள், ஊா்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

அனைவருக்குமே தங்கள் மத வழக்கப்படி வழிபாடு நடத்திக் கொள்ள உரிமை உள்ளது. மத வழிபாட்டு இடங்களில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தினால், அந்த வளாகத்தில் இருப்பவா்களுக்கு மட்டும் கேட்கும்படியான ஓசையில் இருப்பது நல்லது. இனி வரும் காலத்தில் எந்தப் புதிய இடத்திலும் ஒலி பெருக்கிகளை நிரந்தரமாக வைத்துப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

மாநில சிலம்பப் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT