பிரதமா் நரேந்திர மோடி 
இந்தியா

நாளை குடிமை பணிகள் நாள்: விருதுகள் வழங்குகிறார் பிரதமர்

குடிமை பணிகள் நாளையொட்டி, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகளை பிரதமர் நாளை (ஏப்ரல் 21) பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.

DIN

புதுதில்லி: குடிமை பணிகள் நாளையொட்டி, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகளை பிரதமர் நாளை (ஏப்ரல் 21) பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.

விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி விருதை வழங்குகிறார். இந்நிகழ்வின் போது அவர் அரசு ஊழியர்களிடமும் உரையாற்றவுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிரதம மந்திரி விருதுகள் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கும், மத்திய/மாநில அமைப்புகளின் நலனுக்காக செய்த அசாதாரண மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரிக்கும் நோக்கில் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை திட்டங்கள் மற்றும் புதுமைகளை திறம்பட செயல்படுத்துவதற்காகவும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

2022-ம் ஆண்டு குடிமை பணிகள் நாளையொட்டி, 'ஜன் பகிதாரி' திட்டத்தை ஊக்குவித்தல் அல்லது போஷன் அபியானில் மக்கள் பங்கேற்பு, கேலோ இந்தியா திட்டம், டிஜிட்டல் மூலம் விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவதை ஊக்குவித்தல் போன்ற ஐந்து முன்னுரிமை திட்டங்களில் செய்யப்படும் முன்மாதிரியான பணிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். 

அடையாளம் காணப்பட்ட ஐந்து முன்னுரிமைத் திட்டங்கள் மற்றும் பொது நிர்வாகம்/சேவைகள் போன்ற துறைகளில் உள்ள கண்டுபிடிப்புகளுக்காக மொத்தம் 16 விருதுகள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT