நவாப் மாலிக் 
இந்தியா

நவாப் மாலிக் வழக்கு: நீதிமன்றத்தில் 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

DIN


பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.

பின், மும்பை உயர் நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது.

கடந்த மார்ச் 7-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் இருந்த நவாப் மாலிக்கை மார்ச் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், நீதிமன்றக் காவல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இதையடுத்து, அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவல் ஏப்ரல் 22-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நவாப் மாலிக்கிற்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்க இயக்குநரகம் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT