உபி: தாமதமாக வந்ததைக் கண்டித்ததால் தலைமையாசிரியரை துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்
உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்ததைத் தட்டிக் கேட்ட தலைமையாசிரியரை துப்பாக்கியால் ஆசிரியர் ஒருவர் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்ததைத் தட்டிக் கேட்ட தலைமையாசிரியரை துப்பாக்கியால் ஆசிரியர் ஒருவர் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியரான பிரதாப் சிங் பள்ளிக்கு ஒழுங்காக வருகை தராமல் அடிக்கடி விடுப்பு எடுத்துள்ளார்.
மேலும், வருகை தரும் நாள்களிலும் தாமதமாகப் பள்ளிக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து இச்செயல் நடந்துகொண்டிருந்ததால் கடந்த செவ்வாய்கிழமை அப்பள்ளியின் தலைமையாசிரியர் அர்விந்த் குமார் ஆசிரியர் பிரதாப்பை கண்டித்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியதும் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலைமையாசிரியரை பிராதப் சுட்டார்.
இருப்பினும், பெரிய காயங்கள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. பின், சம்பவ இடத்திற்கு வந்த அத்தொகுதியின் கல்வி அதிகாரி ஆசிரியர் பிரதாப் சிங்கை பணி இடைநீக்கம் செய்யவும் விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்தார்.