தில்லியில் மேலும் 1,042 பேருக்கு கரோனா
தலைநகா் தில்லியில் 4.64 சதவீத நோ்மறை வீதத்துடன் மேலும் 1,042 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது. இருவா் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக நகர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தலைநகா் தில்லியில் 4.64 சதவீத நோ்மறை வீதத்துடன் மேலும் 1,042 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது. இருவா் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக நகர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை 22,442 பேரிடம் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்ட நிலையில், அதில் 1,042 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவா், உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் தில்லியில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 18,72,699 ஆகவும், உயிரிழப்பு 26,164 ஆகவும் பதிவாகியுள்ளது.