இந்தியா

உயர்கல்விக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம்: யுஜிசி, ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

DIN

உயர்படிப்புகளுக்காக இந்திய மாணவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. 

பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

உயர்படிப்புகளுக்காக இந்தியாவில் இருந்து யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம். இந்தியர்கள் மற்றும் இந்தியக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களும் பாகிஸ்தானில் உள்ள எந்த கல்வி நிறுவனத்தில் படித்தாலும் அவர்கள் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. 

பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் இந்தியாவில் வேலை தேடத் தகுதியற்றவர். 

அகதிகள் யாரேனும் பாகிஸ்தானில் உயர்கல்வி பெற்றிருந்தால், இந்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் பெற்று இந்தியாவில் குடியுரிமை பெற்ற பின்னர், இங்கு வேலைவாய்ப்புக்கு கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக யுஜிசி தனியே இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT