இந்தியா

கரோனா தொடர்பாக உயர்நிலை கூட்டம்: கர்நாடக முதல்வர்

DIN

கர்நாடகத்தில் கரோனா தொற்று பரவிவரும் நிலையில், சமீபத்திய தொற்று நிலைமையை மறு ஆய்வு செய்ய  அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்பை உயர்நிலை கூட்டத்தை நடத்தவுள்ளார். 

இந்த கூட்டத்தில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.என் அஸ்வத்நாராயணன் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். 

கர்நாடகத்தில் கடந்த வாரத்தில் இரண்டு முறை கரோனா புதிய வழக்குகள் 100-ஐ தாண்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 21ல் 100 பேருக்கும், ஏப்ரல் 23-ல் 139 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக 60 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகியுள்ளன. 

கரோனா நான்காவது அலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணியவும், கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றவும் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறியது, 

மக்கள் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும். 

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 

நான்காவது அலையை எதிர்கொள்ள மாநிலம் தயாராகி வருகிறது. விமான நிலையங்களில் கடுமையான வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும். 

புது தில்லி மற்றும் பிற வட இந்திய மாநிலங்கள் தொற்று எண்ணிக்கையில் காணும் அதே வேளையில், கர்நாடகா இரண்டு முதல் மூன்று வாரங்கள் பின்னால் உள்ளது. தற்போது மாநிலத்தில் தேவையில்லாமல் சோதனையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT