தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ் 
இந்தியா

‘காங்கிரஸில் இணைவதாக பிரசாந்த் கிஷோர் கூறவில்லை’: தெலங்கானா அமைச்சர்

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள், அவர் கூறவில்லை என தெலங்கானா அமைச்சர் ராம ராவ் கூறியுள்ளார்.

DIN

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள், அவர் கூறவில்லை என தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ் கூறியுள்ளார்.

அடுத்தாண்டு தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு தேர்தல் யுத்திகளை வழங்கி இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் ஐ-பேக் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோா் காங்கிரஸில் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா அமைச்சர் கூறியதாவது:

“நாங்கள் பிரசாந்த் கிஷோரை முதல்முறையாக சந்திக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளை பலமுறை சந்தித்துள்ளோம். காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள், அவர் அதுபற்றி கூறவில்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் உத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்! ஜனவரிமுதல் இயக்கம்!

SCROLL FOR NEXT