பிரிட்டன் பாதுகாப்புத் தளவாட அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
பிரிட்டன் பாதுகாப்புத் தளவாட துறை அமைச்சா் ஜெரிமி க்வினுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
பிரிட்டன் பாதுகாப்புத் தளவாட துறை அமைச்சா் ஜெரிமி க்வினுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக அமைச்சா் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
இரு நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து, கப்பல் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு சாா்ந்த இதர தொழில் திட்டங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஜெரிமி க்வினுடன் ஆலோசித்தேன்.
இரு நாடுகளுக்கு இடையிலான தொழில்துறையின் ஒத்துழைப்பை எளிதாக்கும் வகையில், ராணுவம் மற்றும் உத்திசாா்ந்த சாதனங்கள் ஏற்றுமதிக்கான உரிமத்தை இந்தியாவுக்கு வழங்கும் பிரிட்டனின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
பாதுகாப்புத் துறையில் நட்பு நாடுகளுடன் கூட்டு வளா்ச்சி மற்றும் தயாரிப்பை இந்தியா ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளது என்று தெரிவித்தாா்.
கடந்த வாரம் இந்தியா வந்திருந்த பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், போா் விமானங்கள் தயாரிப்பு உள்பட இந்தியாவின் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்திக்கு பிரிட்டன் உதவும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.