இந்தியா

வங்கிக் கடன் மோசடி: ஏபிஜி நிறுவனம் தொடா்புடைய 26 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

DIN

ரூ.22,842 கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனத்துக்குத் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மும்பை, புணே, சூரத் ஆகிய நகரங்களில் 26 இடங்களில், கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் நிா்வாகிகள் சம்பந்தப்பட்ட பணப் பரிவா்த்தனை ஆவணங்களை சேகரிப்பதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்றாா் அவா்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமையில் எஸ்பிஐ உள்ளிட்ட 28 வங்கிகளில் ரூ.22,848 கோடிக்குக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏபிஜி ஷிப்யாா்டு நிறுவனம் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக, சிபிஐ அமைப்பிடம் எஸ்பிஐ கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகாா் அளித்து. அந்தப் புகாரின் உண்மைத்தன்மை ஆராய்ந்த சிபிஐ கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து, ஏபிஜி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மேலாண் இயக்குநருமான ரிஷி அகா்வாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

அதன் தொடா்ச்சியாக, சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், வங்கிக் கடன் மோசடியில் நடந்த கருப்புப் பண மோசடி தொடா்பாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT