இந்தியா

கரோனா அதிகமில்லை; முகக்கவசம் கட்டாயம்: கேரள சுகாதாரத் துறை

DIN

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிக்கவில்லை என்றாலும், முக கவசம் அணிவதை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆலோசனை மேற்கொண்டார். கரோனா பரவல் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ்,  நோய் பரவல் தற்போது அதிகமாக இல்லை என்றாலும்  பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்பட நிபந்தனைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

கேரளத்தில் எர்ணாகுளத்தில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ளது. அங்கு தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT