இந்தியா

ஏப். 28-ல் அசாம் செல்கிறார் பிரதமர் மோடி

DIN


பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 28ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

அசாம் மாநிலம் திபு பகுதியில் நடைபெறவுள்ள அமைதி, ஒற்றுமை, வளர்ச்சிப் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார். 

பிற்பகல் 1.45 மணிக்கு திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் பிரதமர், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைக்கவுள்ளார். 

பின்னர் பிற்பகல் 3 மணியளவில் திப்ருகரில் உள்ள கானிக்கர் திடலில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்கவுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஆறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அவர், ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT