பிரசாந்த் கிஷோர் 
இந்தியா

‘என்னைவிட காங்கிரஸுக்கு தலைமை தேவை’: பிரசாந்த் கிஷோர் விளக்கம்

காங்கிரஸில் இணைய மறுத்தது குறித்து தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

DIN

காங்கிரஸில் இணைய மறுத்தது குறித்து தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

நடப்பாண்டு இறுதியில் ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலும், வரும் 2024-இல் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தல் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் கடந்த வாரத்தில் பிரசாந்த் கிஷோர் அறிக்கை ஒன்றை அளித்திருந்தார்.

இதற்கிடையே காங்கிரஸில் சேரவும், அதிகாரம் பெற்ற குழுவில் இணையவும் சோனியா காந்தி அழைப்பு விடுத்ததாகவும், அதை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“காங்கிரஸ் கட்சியில் இணையவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்க விடுக்கப்பட்ட கோரிக்கையை நான் மறுத்துவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே முக்கியம்.

கட்சிக்குள் அழமாக வேரூன்றி இருக்கும் அடிப்படை கட்டமைப்பிற்குள் உள்ள பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல்! பாலின தேர்வு தடைச்சட்டம் - 1992

மோடி தமிழக வருகைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: நயினார் நாகேந்திரன்

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

SCROLL FOR NEXT