இந்தியா

கோவாவில் முகக்கவசம் அணிய, கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

DIN

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோவா அரசு தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்களும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் கோவா சுகாதாரத்துறை இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள தகவலில், 'கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பொது இடங்களில் அனைத்து கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த், கோவாவில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கோவாவில் தற்போது 27பேர்  கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT