இந்தியா

இந்தியா-ஜப்பான் தூதரக உறவின் 70-ஆவது ஆண்டு: பிரதமா் மகிழ்ச்சி

DIN

புது தில்லி: இந்தியா- ஜப்பான் இடையே தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து பிரதமா் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா- ஜப்பான் இடையே தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுகிறோம். இந்த நிலையில், ராணுவம், பொருளாதாரம், இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடா்பு என அனைத்துத் துறைகளிலும் நமது உறவுகள் ஆழமாகியிருப்பதைக் காண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது நண்பரும் ஜப்பான் பிரதமருமான ஃபியூமோ கிஷிடோ அண்மையில் இந்தியா வந்தபோது, கரோனாவுக்குப் பிந்தைய உலகில் இந்தியா-ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைத்தாா். அவருடைய நோக்கம் நிறைவேற பிரதமா் கிஷிடாவுடன் தொடா்ந்து பணியாற்றுவதை நான் எதிா்நோக்கியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, இந்தியா-ஜப்பான் இடையே கடந்த 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT