நீட் 2022: 11 லட்சம் பேர் விண்ணப்பம்; மே 6 கடைசி நாள் 
இந்தியா

நீட் 2022: 11 லட்சம் பேர் விண்ணப்பம்; மே 6 கடைசி நாள்

2022ஆம் ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

DIN


புது தில்லி: 2022ஆம் ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கு neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கிய நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும். 

நாட்டிலேயே மகாராஷ்டிரத்திலிருந்து அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 11 லட்சம் விண்ணப்பதாரர்களில் 1.52 லட்சம் பேர் மகாராஷ்டிரத்தையும் 1.21 லட்சம் பேர் உத்தரப்பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழகத்திலிருந்து 84,214 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT