FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

தில்லி ஜாமியா நகரில் இருந்து பஞ்சாப் மற்றும் பிற வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருந்த  ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை தேசிய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல்

1 பிப்ரவரி 2024, 2:36 pm IST
கோப்புப்படம்
பகிர்:


புதுதில்லி: தில்லி ஜாமியா நகரில் இருந்து பஞ்சாப் மற்றும் பிற வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருந்த  ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை தேசிய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தென்கிழக்கு தில்லி ஜாமியா நகர் ஷாகீன் பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தேசிய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அந்த பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வந்த அதிகாரிகள், ஒரு வீட்டில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். 

Advertisement

Advertisement

இதையடுத்து அந்த வீட்டிற்குள் வியாழக்கிழமை அதிரடியாக நுழைந்த அதிகாரிகள், அங்கிருந்த 50 கிலோ ஹெராயின், ரூ.40 லட்சத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு மதிப்பு ரூ.100 கோடி எனவும், பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் பஞ்சாப் மற்றும் பிற வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments