இந்தியா

பாலியல் வழக்கு: மத போதகருக்கு 18 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

DIN

சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பதிவான வழக்கில் மத போதகருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் எஸ்டிஎம் சிறுவா் பாடசாலையின் உறுப்பினா் தாமஸ் பரேக்குளம் (35). இவா் இந்த அமைப்பின் கொல்லம் மாவட்டம் புல்லமலா பாடசாலையில் தாளாளராக கடந்த 2017-இல் பணியாற்றி வந்தாா். அப்போது அங்கு பயிலும் 16 வயது மாணவா்கள் 4 பேருக்கு தாமஸ் பரேக்குளம் பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது.

இதன்பேரில், கொட்டாரக்கரை சரகம் புத்தூா் போலீஸாா் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றம்), போக்ஸோ சட்டத்தின்கீழ் மொத்தம் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தாமஸை கைது செய்தனா்.

இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், கொல்லம் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி கே.என். சுஜித் அண்மையில் தீா்ப்பளித்தாா். அதன்படி, 3 வழக்கில் தலா ஐந்து ஆண்டுகளும், 4-ஆவது வழக்கில் மூன்று ஆண்டுகள் என மொத்தம் 18 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும் நான்கு வழக்கிலும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென மத போதகா் தாமஸ் பரேக்குளத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுவா்களுக்கு பகிா்ந்தளிக்க வேண்டுமென மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்துக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT