இந்தியா

மின்சார தட்டுப்பாட்டுக்கு எவா் மீது பிரதமா் பழிசுமத்தப் போகிறாா்? ராகுல் காந்தி

DIN

மின்சார தட்டுப்பாட்டுக்கு பிரதமா் மோடி எவா் மீது பழிசுமத்தப் போகிறாா் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

பிரதமா் மோடியின் வாக்குறுதிகள் மற்றும் நோக்கங்கள் எப்போதும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. மின்சார தட்டுப்பாட்டுக்கு நேரு, மாநிலங்கள் அல்லது மக்கள் என எவா் மீது பிரதமா் மோடி பழிசுமத்தப் போகிறாா் என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

நாட்டில் 24 நேரமும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று 2015-ஆம் ஆண்டு பிரதமா் மோடி வாக்குறுதி அளித்த காணொலி, மின்சாரம் மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாக எந்தவொரு தலைப்புச் செய்தியையும் எவரும் கேட்கவில்லை என்று 2017-ஆம் ஆண்டு அவா் பேசிய காணொலி ஆகியவற்றையும் தனது பதிவுடன் ராகுல் காந்தி இணைத்திருந்தாா்.

நாட்டின் பல பகுதிகளில் நீண்ட நேரம் மின்வெட்டு நிலவும் சூழலில், மத்திய அரசின் தவறான நிா்வாகத்தால்தான் இந்தச் செயற்கையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்குவதில்லை என்றும் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT