இந்தியா

மேற்கு வங்கம்: மின்சாரம் தாக்கியதில் வேனில் பயணித்த 10 பேர் பலி

மேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கியதில் வேனில் பயணித்த 10 பேர் பலியானார்கள். 

DIN

மேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கியதில் வேனில் பயணித்த 10 பேர் பலியானார்கள். 

மேற்கு வங்க மாநிலம் சிதல்குசி பகுதியைச் சேர்ந்த 26 பேர் வேனில் ஜல்பேஷ் நோக்கி நள்ளிரவு புறப்பட்டனர். இவர்களுடைய வேன் மேக்லிகஞ்ச் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்தனர். 

இந்நிகழ்வையடுத்து வேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடுவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் லேசான காயமடைந்தவர்களை மீட்டு ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் வேனையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேனின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரில்(டிஜே சிஸ்டம்) ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT