கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இதர 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இடுக்கியில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கல்லாறு - பொன்முடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதையடுத்து, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.