இந்தியா

தில்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: மொத்தம் 6 பேர்

DIN

தில்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தில்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 

தில்லியில் வசித்துவந்த நைஜீரியாவை சேர்ந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு எந்தவித பயணமும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது தில்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த ஐந்து நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. உடலில் கொப்புளங்களும் இருப்பதால், தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டுள்ளது. 

அவரது மாதிரிகள் புணேவிலுள்ள நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், திங்கள் கிழமையான இன்று குரங்கு அம்மை அவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே கடந்த 24ஆம் தேதி ஒருவருக்கு முதல்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார். தற்போது இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT