அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களின் முதல் கட்டப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களின் முதல் கட்டப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தில்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, தற்போது குஜராத் மாநிலத்திலும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றது.

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுவாபாடா எம்எல்ஏவாக பதவியேற்றார் ஜெய் தோலாகியா!

கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ: நயினார் நாகேந்திரன்

பேச மாட்டாயா? மானசா சௌத்ரி!

மறுவெளியீடாகும் அமர்க்களம்!

சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைக்குமா?

SCROLL FOR NEXT