கோப்புப்படம் 
இந்தியா

கேரளத்தில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு சிவப்பு சிற எச்சரிக்கை

கேரளத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு சிவப்பு சிற எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

கேரளத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு சிவப்பு சிற எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல ஓடைகள் நிரம்பி வழிகிறது.

கடலுண்டி (மலப்புரம்), பாரதப்புழா (பாலக்காடு), ஷிரியா (காசர்கோடு), கரவனூர் (திருச்சூர்), காயத்ரி (திருச்சூர்) ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கேரளத்தில் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர்  தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT