இந்தியா

5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி: மத்திய அரசு

‘வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளபடி செய்துள்ளன’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

DIN

‘வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளபடி செய்துள்ளன’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கே.கராட் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 1,61,328 கோடியாக இருந்த வங்கி கடன் தள்ளுபடி, 2018-29 ஆம் ஆண்டு ரூ. 2,36,265 கோடியாக அதிகரித்தது. பின்னா் 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 2,34,170 கோடி, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2,02,781 கோடியாகவும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,57,096 கோடியாகவும் வாராக் கடன் தள்ளுபடி படிப்படியாக குறைந்தது.

ஒட்டுமொத்தமாக 2017-18 முதல் 2021-22-ஆம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ரூ. 9,91,640 கோடி வங்கி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும், வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவா்களின் எண்ணிக்கை கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில்தான் அதிகபட்சமாக 2,840 போ் என்ற அளவில் உயா்ந்திருந்தது. இந்த எண்ணிக்கை 2021-22-ஆம் ஆண்டில் 2,700-ஆக குறைந்தது என்று பதிலளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT