முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை பகல் 12 வரை ஒத்திவைப்பு

மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
பகிர்:

மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்கள் காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்கிய நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், அவை நடவடிக்கைகளை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →