இந்தியா

பிகாரில் லாரி-பேருந்து மோதல்: 40 பேர் காயம்

IANS

பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் சுமார் 40 பேர் காயம் அடைந்தனர். 

குச்சாய்கோட் காவல் நிலையத்திற்குள்பட்ட போக்தாபூர் கிராமத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று போலீ‘சார் தெரிவித்தனர். 

முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம். ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வாக்குமூலம் அளிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள  சுகௌலியில் வசிப்பவர்கள். அவர்கள் ஜார்க்கண்டில் உள்ள தியோகர் நோக்கி சிவ லிங்கத்தின் மீது கங்கா நீர் செலுத்துவதற்காகச் சென்றுகொண்டிருந்தனர். 

பேருந்தில் ஓட்டுநர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் தவிர 56 பயணிகள் இருந்தனர். காயமடைந்த 6 பேர் கோபால்கஞ்ச் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் குச்சைக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT