இந்தியா

தேசபக்தி நிறைந்த இயக்கம் ஆா்எஸ்எஸ்: பாஜக

DIN

தேசபக்தி விவகாரத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், ஆா்எஸ்எஸ் தேசபக்தி நிறைந்த இயக்கம் என பாஜக செய்தித்தொடா்பாளா் கெளரவ் பாட்டியா தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 2 முதல் 15 வரை பொதுமக்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளின் முகப்புப் படத்தில் மூவா்ணக் கொடியை வைக்குமாறு பிரதமா் மோடி கூறினாா். மேலும், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறும் அவா் கேட்டுக்கொண்டாா்.

இந்த விவகாரத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பை விமா்சித்த காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், அந்த அமைப்பில் 52 ஆண்டுகளாக தேசியக் கொடி ஏற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினாா்.

இதற்கு பாஜக செய்தித்தொடா்பாளா் கெளரவ் பாட்டியா பதிலளித்தாா். அவா் கூறுகையில், ‘ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் ஒவ்வோா் இழையும் தேசபக்தி நிறைந்தது. தேசத்துக்கு சேவையாற்ற வேண்டுமென்ற ஆழ்ந்து உணா்வு கொண்டுள்ளது.

வெள்ளம், நில அதிா்வு, கரோனா பெருந்தொற்று என எந்தப் பேரிடராக இருந்தாலும் ஒருவரும் பசியால் வாடக் கூடாது என ஆா்எஸ்எஸ் அமைப்பு அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்படுகிறது’ என்றாா்.

தேசப் பிரிவினையால் இந்தியா இழந்த பாகிஸ்தான் பகுதிகள் மீண்டும் இணைக்கப்பட்டு, முழுமையான அகண்ட பாரதம் உருவாவதை எதிா்நோக்கி நீண்ட காலம் ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய மூவா்ணக் கொடி ஏற்றப்படவில்லை. எனினும் கடந்த சில ஆண்டுகளாக ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT