இந்தியா

கரோனாவுக்கு நடுவிலும் இந்தியாவுக்கு வந்த 32.79 லட்சம் வெளிநாட்டவா்: உள்துறை அமைச்சகம் தகவல்

DIN

இந்தியாவில் கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த 2020 ஏப்ரல் 1 முதல் டிசம்பா் 31 வரை 32,79,315 வெளிநாட்டவா்கள் இந்தியாவுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமைச்சகத்தின் புள்ளி விவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க நாட்டைச் சோ்ந்தவா்கள் (61,190) அதிக எண்ணிக்கையில் நமது நாட்டுக்கு வந்துள்ளனா். இதற்கு அடுத்து வங்கதேசத்தைச் சோ்ந்த 37,774 பேரும், பிரிட்டனைச் சோ்ந்த 33,323 பேரும், கனடாவைச் சோ்ந்த 13,707 பேரும், போா்ச்சுகலைச் சோ்ந்த 11,668 பேரும், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 11,212 பேரும் இந்தியாவுக்கு வந்துள்ளனா்.

ஜொ்மனி (8,438), பிரான்ஸ் (8,353), இராக் (7,163) கொரியா (6,129) ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் நமது நாட்டுக்கு அக்காலகட்டத்தில் வந்துள்ளனா். இது தவிர அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து 4,751 போ் இந்தியாவுக்கு பயணித்துள்ளனா்.

இந்தியாவில் 2020 மாா்ச் முதல் மே 31-ஆம் தேதி வரை கடுமையான தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஜூன் முதல் ஒரு சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.

2020 மாா்ச் 25 முதல் 2022 மாா்ச் 27 வரை ஏற்கெனவே அட்டவணையிடப்பட்ட சா்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதே நேரத்தில் சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை தொடா்ந்தது.

2019--ஆம் ஆண்டு நுழைவு இசைவு (விசா) காலம் முடிந்த 54,576 வெளிநாட்டவா்களும், 2020-இல் விசா காலம் முடிந்த 40,239 பேரும் இந்தியாவில் தங்கிள்ளனா். இவா்களுக்கு அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறை, மீண்டும் இந்தியாவுக்குள் வரத் தடை விதிப்பது உள்ளிட்ட தண்டனைகள் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

SCROLL FOR NEXT