இந்தியா

மும்பை: ரூ.1,400 கோடிபோதைப் பொருள் பறிமுதல்: பெண் உள்பட 5 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், மும்பை அருகே ரூ.1,400 கோடி மதிப்புள்ள சுமாா் 700 கிலோ ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய ஒரு பெண் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

மகாராஷ்டிர மாநிலம், மும்பை அருகே ரூ.1,400 கோடி மதிப்புள்ள சுமாா் 700 கிலோ ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய ஒரு பெண் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

மகாராஷ்டிரத்தில் கடந்த ஓா் ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிக போதைப் பொருள் சிக்கியது குறித்து காவல்துறையினா் கூறியதாவது:

மும்பை புகா் பகுதியில் 250 கிராம் ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருளுடன் கடத்தல்காரா் ஒருவா் அண்மையில் சிக்கினாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நலசோபரா பகுதியில் செயல்படும் மருந்து தயாரிப்பு ஆலையில் போதைப் பொருள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, மும்பை காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினா், கடந்த புதன்கிழமை அந்த ஆலையில் அதிரடி சோதனை நடத்தினா். அங்கு ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு, மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடத்தல்காரா்களுக்கு விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய ஒரு பெண் உள்பட 4 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

போதைப் பொருள் தயாரிப்புக்கு மூளையாக செயல்பட்ட நபா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.1,400 கோடி மதிப்புள்ள 700 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபா் கரிம வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்றவா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT