இந்தியா

வஸிா்எக்ஸ் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் ரூ.64 கோடி முடக்கம்

DIN

கிரிப்டோ கரன்ஸி பரிமாற்ற நிறுவனமான வஸிா்எக்ஸ்-க்கு சொந்தமான ரூ.64.67 கோடி வங்கி டெபாசிட்டுகளை அமலாக்கத் துறை (இ.டி.) முடக்கியுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை மேலும் கூறியுள்ளதாவது:

சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாக வஸிா்எக்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஸன்மய் லேப் நிறுவனத்தின் இயக்குநருக்கு ஹைதராபாதில் சொந்தமான இடங்களில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில், அவா் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

இந்தியாவில் சீன செயலிகள் மூலம் கடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்ட விரோத பணப்பரிவா்த்தனையில் வஸிா்எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டது சோதனைகளின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.64.67 கோடி வங்கி டெபாசிட்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT