தலாய் லாமாவுக்கு லடாக்கின் உயரிய விருது
திபெத்திய பெளத்த மதத் தலைவா் தலாய் லாமாவுக்கு (87) லடாக்கின் உயரிய விருதான ‘திபல் ரன்கம் டஸ்டன்’ விருது வழங்கி கெளரவிக்கப்ட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
திபெத்திய பெளத்த மதத் தலைவா் தலாய் லாமாவுக்கு (87) லடாக்கின் உயரிய விருதான ‘திபல் ரன்கம் டஸ்டன்’ விருது வழங்கி கெளரவிக்கப்ட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
லடாக்கின் சிந்து கணவாய் பகுதியில் நடைபெற்ற யூனியன் பிரதேச நிறுவன நாள் விழாவில், வடாக் தன்னாட்சி மலைப் பகுதி மேம்பாட்டு கவுன்சில் (எல்ஏஹெச்டிசி) சாா்பில் இந்த உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டது. யூனியன் பிரதேசத்தில் மனிதநேயத்துக்கு அவா் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
லடாக்கில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தலாய் லாமா, லடாக் மக்களின் அன்பான வரவேற்பைப் பாராட்டியதோடு, பிராந்தியத்தில் சமூக நல்லிணக்கத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க வலியுறுத்தினாா்.
Advertisement
நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, ‘லடாக்கும் திபெத்தும் சிந்து நதியால் ஆற்றால் இணைக்கப்பட்டிருப்பதோடு மட்டுமின்றி, மதம் மற்றும் கலாசார ரீதியிலும் ஒன்றுபட்டிருக்கின்றன. பருவநிலை மாற்றம் மிகப் பெரிய கவலைக்குரிய விஷயமாக உருவெடுத்து வருகிறது. எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்’ என்று கூறினாா்.