இந்தியா

பாகிஸ்தான்: பஞ்சாப் மாகாணத்தில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு

DIN

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முதல்வர் பர்வேஸ் இலாஹி தலைமையிலான அரசாங்கத்தில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளனர். 

ஆளுநர் மாளிகையில் புதிதாகப் பதவியேற்ற உறுப்பினர்களுக்கு  ஆளுநர் மொஹம்மது பலீக்-உர்-ரஹ்மான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

முன்னதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உமர் சர்பராஸ் சீமா பிஎம்எல்-என் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய மறுத்துவிட்டார். 

இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் இலாஹி மற்றும் பிற முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். 

பஞ்சாப் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், மக்களுக்குச் சேவை செய்வதற்கும் மாகாண அமைச்சர்கள் இரவும் பகலும் பாடுபடுவார்கள் என்று நம்பப்படுகிறது. என்று முதல்வர் கூறினார். 

பஞ்சாப் முதல்வர் தேர்தலில் பெரும் நாடகத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பஞ்சாப் முதல்வர் பெர்வைஸ் இலாஹியுடன் இணைந்து மாகாண அமைச்சரவையை இறுதி செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT