800 பேர் கொண்ட கிராமத்தில் 50 பேர் பலி 
இந்தியா

800 பேர் கொண்ட கிராமத்தில் 50 பேர் பலி: காரணம் தெரியாமல் அச்சத்தில் குடும்பங்கள்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மொத்தமிருந்த 800 பேரில் 50 பேர் காரணமே தெரியாமல் மரணமடைந்திருப்பது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN


ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மொத்தமிருந்த 800 பேரில் 50 பேர் காரணமே தெரியாமல் மரணமடைந்திருப்பது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரும் ஒரே நாளில் இறந்துவிடவில்லை. ஆனால், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்த கிராமத்தைச் சேர்ந்த 61 பேர் இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், கிராம நிர்வாகமோ, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 50 முதல் 52 பேர் இறந்திருப்பதாகக் கூறுகிறது.

எதுவாக இருந்தாலும், 800 பேர் கொண்ட கிராமத்தில் 50 பேர் பலியாகியருப்பதும், அதுவும் ஏன் இறந்தார்கள் என்பது அந்த கிராம மக்களுக்குத் தெரியாது என்பதும்தான் அதிர்ச்சி.

மரணமடைந்த பலருக்கும் கால்களில் வீக்கம், மயக்கம் போன்றவை ஏற்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் ஏன் இறந்தார்கள் என்ற காரணம் கண்டறியப்படவில்லை. இதையடுத்து சுகாதாரத் துறையினர் உண்மையைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் கிராமத்தின் மண் மற்றும் குடிநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மழைக்காலம் தொடங்கிவிட்டால், இந்த கிராமங்களைத் தொடர்பு கொள்வது சிரமம். அதனால்தான் இந்த தகவல் வெளியே தெரியாமல் போயிருக்கிறது. உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் விசாரணை தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் மாவட்ட நிர்வாகிகள்.

சுக்மா மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் கூறுகையில், இந்த மரணங்களுக்குப் பின்னால் குடிநீர்தான் காரணமாக இருப்பதாகவும், இப்பகுதியில் கிடைக்கும் குடிநீரில் அனுமதிக்கப்படும் அளவை விட அதிகமாக ப்ளோரைடு இருப்பதாகவும், அதிக இரும்புச் சத்து இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது தெரிய வந்திருப்பதாகவும் கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT