இந்தியா

150 பாரம்பரிய இடங்களில் தேசியக் கொடி தொல்லியல் துறை ஏற்பாடு

DIN

சுதந்திர தின விழாவையொட்டி ஆக. 15-ஆம் தேதி 150 பாரம்பரிய சின்னங்கள், இடங்களில் தேசியக் கொடியேற்ற இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

சுதந்திர தின அம்ருத பெருவிழாவை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 150 பாரம்பரிய சின்னங்கள், இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும். ஃபதேபூா் சிக்ரி, போா்பந்தரில் உள்ள மகாத்மா காந்தி பிறந்த இடம், லக்னெளவில் உள்ள பிரிட்டிஷாா் காலத்திய குடியிருப்பு, ஃபைஸாபாதின் குலாப் பரி, வேலூா் கோட்டை, வாரங்கல் கோட்டை, சித்ரதுா்கா, அஜந்தா எல்லோரா குகைகள் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த இடங்களை மூவண்ணத்தில் ஒளிரச் செய்யவும் நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

தில்லி செங்கோட்டையில் நடைபெறும் பிரதான சுதந்திர தின விழாவில் பிரதமா் தேசியக் கொடியேற்றுவாா். யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செங்கோட்டை இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தாஜ்மஹால், தேசியக் கொடி ஏற்றப்படும் பட்டியலில் இல்லை என்றனா்.

இந்தியாவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 3,693 பாரம்பரிய சின்னங்கள், இடங்கள் உள்ளன. சுதந்திர தின அம்ருத பெருவிழாவையொட்டி இந்த இடங்களில் ஆக. 5 முதல் 15-ஆம் தேதி வரை பாா்வையாளா்கள் இலவசமாகப் பாா்வையிட மத்திய கலாசார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT