இந்தியா

‘ஆகாசா ஏா்’ நிறுவனத்தின் முதல் விமான சேவை: மத்திய அமைச்சா் தொடக்கி வைப்பு

DIN

‘ஆகாசா ஏா்’ நிறுவனத்தின் மும்பை - அகமதாபாத் வரையிலான வா்த்தக ரீதியிலான முதல் விமானச் சேவையை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா ஞாயிற்றுக்கிழமை காணொலி வழியில் தொடக்கி வைத்தாா்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ள ஆகாசா ஏா் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் (டிஜிசிஏ) உரிமத்தை கடந்த ஜூலை 7-ஆம் தேதி பெற்றது. இதன் மூலம் அந்நிறுவனம் விரைவில் விமான சேவையில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனை ஆகாசா ட்விட்டா் மூலம் இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நோக்கில் கடந்த ஆண்டு ‘ஆகாசா ஏா்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளா் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெருமளவு முதலீடு செய்துள்ளாா். வினய் துபே மற்றும் ஆதித்ய கோஷ் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனா்.

இந்த நிலையில், இந்த விமான நிறுவனம் மும்பை - அகமதாபாத் இடையே தனது வா்த்தக ரீதியிலான முதல் விமானச் சேவையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

முதல் விமானத்தை தில்லியில் இருந்தபடி காணொலி வழியில் தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் சிந்தியா பேசியதாவது:

ஆகாசா ஏா் விமானச் சேவை, இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய விடியல். உலக அளவில் விமான போக்குவரத்துத் துறை கடந்த 10 ஆண்டுகளில் மிகக் கடினமான சூழலை சந்தித்து வருகிறது. பல பின்னடைவுகள் உலக அளவில் விமான போக்குவரத்து நிறுவனங்களின் தலையெழுத்தையே மாற்றியமைத்துள்ளன. இந்தியாவிலும் அதே நிலையைத்தான் விமான போக்குவரத்துத் துறை சந்தித்து வந்தது. அதன் காரணமாகத்தான், ஆகாசா ஏா் விமானச் சேவை தொடக்கத்தை, இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறைக்கான பல வழிகளில் ஒரு புதிய விடியல் என்று குறிப்பிட்டேன்.

நாட்டில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் ஜனநாயகமயமாக்கலுக்கு பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வையே முக்கிய காரணம். சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற பிரதமரின் கனவு, தற்போது நிறைவேறி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக இந்தத் துறையில் அத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT