இந்தியா

நிலக்கரித்துறை முன்னாள் செயலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக நிலக்கரி ஒதுக்கப்பட்டதாக முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் மீது தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு மூன்று ஆண்டுகளும், இணைச் செயலாளர் கே.எஸ். குரோஃபாவுக்கு இரண்டு ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முறைகேடில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் இயக்குநர் முகேஷ் குப்தாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 முதல் 2008 வரை நிலக்கரித்துறை செயலாளராக இருந்த எச்.சி.குப்தா மீது நிலக்கரி முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT