இந்தியா

திருப்பதியில் லாரி மீது கார் மோதல்: 5 பேர் பலி

திருப்பதியில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியானார்கள். 

DIN

திருப்பதியில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியானார்கள். 

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிரிகிபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காரில் திருப்பதி கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்களுடைய கார் அமராவதி-அனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாசவி பாலிடெக்னிக் அருகே வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது திடீரென மோதியது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குருவம்மா, அணிமிரெட்டி, அனந்தம்மா, ஆதிலட்சுமி, நாகிரெட்டி ஆகிய 5 பேர் பலியானார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

SCROLL FOR NEXT