இந்தியா

அயோத்தியில் சட்டவிரோதமாக நிலம் விற்பனை: பாஜக எம்எல்ஏ மோசடி

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சட்டவிரோதமாக நிலத்தை விற்பனை செய்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. உள்பட 40 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். 

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சட்டவிரோதமாக நிலத்தை விற்பனை செய்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. உள்பட 40 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். 

பாஜக எம்.எல்.ஏ. பிரகாஷ் குப்தா, அயோத்தியா மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் உள்பட 40 பேர் அயோத்தியில் சட்டவிரோத நில விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். 

நிலத்தை விற்பனை செய்தும், கட்டடங்களைக் கட்டி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தற்போது அம்பலமாகியுள்ளதாக  அயோத்தி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் அரசு விதிமுறைகளுக்கு மாறாக நிலத்தை விற்பனை செய்தவர்களின் பட்டியலை அயோத்தியா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதில், பாஜக எம்.எல்.ஏ., அயோத்தியா மேயர் பிரகாஷ் குப்தா உள்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அயோத்தியில் சட்டவிரோதமாக நிலத்தை விற்பனை செய்தும், கட்டடங்களைக் கட்டியும் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

பட்டியலில் இடம்பெற்றுள்ள 40 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அயோத்தியா மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் விஷால் சிங் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகை பறித்த வழக்கு: 2 காவல் துணை ஆய்வாளா்கள் உள்பட 4 போ் கைது

தருமபுரி மாவட்டத்தில் 200 பேருக்கு புல் நறுக்கும் கருவிகள்

எஸ்.ஐ.ஆா். பணி: கிருஷ்ணசாமி வேண்டுகோள்

எஸ்ஐஆா் பணி: மயங்கி விழுந்த விஏஓ மருத்துவமனையில் அனுமதி

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

SCROLL FOR NEXT