இந்தியா

மகாராஷ்டிரம்: பள்ளி அதிகாரியால் மாணவி பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரத்தின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியின் கண்காணிப்பாளர் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

மகாராஷ்டிரத்தின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியின் கண்காணிப்பாளர் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள பத்ராவதி தாலுகாவில் பரஞ்ச் தண்டா கிராமத்தில் உள்ள காமாபாய் ஆசிரமப் பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆகஸ்ட் 4ஆம் தேதி பள்ளி நிர்வாகம், மாணவியின் பெற்றோரிடம், தங்கள் மகள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவளை அழைத்துச் செல்லும் படியும், இடமாற்றச் சான்றிதழையும் வழங்கியுள்ளனர். 

பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வீடு திரும்பியதும் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி கண்காணிப்பாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து வார்தா மாவட்டத்தில் உள்ள ஹிகங்காட் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பின்னர் வழக்கு பத்ராவதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக நாக்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கவால் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 376யின் படி போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT